ஞாயிறு, 2 அக்டோபர், 2022

எத்தனை காதல் கொண்டாயோ?

 மாலவன் விரல்தனை
பற்றி கொண்டே,
வேதங்கள் துலவும்
மூலவன் பாதம் பற்றி
மாலை கொண்டாயே
இமையவன் ஒரு பாகம் கொண்டாயே
உமையே
எத்தனை காதல் கொண்டாயோ?

அவன் கையிலும் தீ
மெய்யிலும் தீ
கண்ணிலும் தீ
சாரதி தங்கையே
தீயோருக்கெல்லாம்
தீ என்பதால்
திருமணம் கொண்டாயோ?
 உமையே
எத்தனை காதல் கொண்டாயோ?

ஞானம் அறியாதோர்
மட்டும்
அறிதலுக்குரிய
அரியவன்.
ஆயர்பாடி
அரி அவன் இளையோளே
திகழ் ஒளி சிதம்பரத்தான்
அகம் நுழைந்தாளே
உமையே
எத்தனை காதல் கொண்டாயோ?

மூவரில் மேலவன்
கங்கையோ
தலைமேலவன்.
மாயவன் சோதரி
மாயங்கள் செய்து
தூயவன் துணையானாயே
உமையே
எத்தனை காதல் கொண்டாயோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தினம் தினம்

 தினம் தினம் உன் நினைவுகள் மலர்ந்திட கணம் தொரும் மணம் முகிழ்ந்திடும் நறு மலரென என் உடல் தனில் நீ கொடியென படர்ந்திட அனுதினம் நின்னணைப்பினில் ...